கொழும்பு விவேகானந்தா கல்லூரி தமிழை வளர்ப்பதில் அருந்தொண்டாற்றிய நாவலர் பெருமானை அடியொற்றி வடகொழும்பில் விவேகானந்தா சபையினரால் 1926இல் நிறுவப்பெற்றதே இன்று தேசியப் பாடசாலையாக விளங்கும் எமது விவேகானந்தா கல்லூரியாகும்.

யாழ்நூலை தமிழுலகுக்குத் தந்து தணியாத புகழ் கொண்டிருந்த சுவாமி விபுலானந்த அடிகளும் சுவாமி சச்சிதானந்தனும் சிறப்பாக கலந்து கொண்ட திறப்பு விழாவிலே 1926 ஆம் ஆண்டு பங்குனிமாதம் 24 ஆம் திகதி இரண்டு ஆசிரியர்களையும் இருபத்தைந்து மாணவர்கைளயும் கொண்டு விவேகானந்தாச் சபையால் சிறு பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் அரசு பொறுப்பேற்கும் வரையில் நிர்வகிக்கப்பட்டு வந்ததே விவேகானந்தா ஆரம்பப் பாடசாலையாகும்.

இவ்வாரம்பப் பாடசாலையானது 1952இல் தரமுயர்ந்து க.பொ.த (சாஃத) வகுப்பு வரை கொண்டிருந்தது. பின்னர் 1963இல் மகா வித்தியாலயமாக தரம் உயர்ந்து க.பொ.த (உஃத)வகுப்பு வரை மாணவர்கள் கல்வி பெற வாய்ப்பளித்தது.

கோட்டாஞ்சேனையில் அமைந்துள்ள இப்பாடசாலை சைவச்சூழலுடன் கூடிய தமிழ் பாடசாலையாக 85 ஆண்டு காலப் படிமுறையான வளர்ச்சி கொண்டதாக இன்று விளங்குகின்றது. மாணவர்களுக்கென விளையாட்டுப் பயிற்சிக்கான மைதானம் இல்லாத போதும் விளையாட்டுப் போடடிகளில் இம்மாணவர்கள் வலய, மாவட்ட, மாகாண தேசிய மட்டங்களிலும் சிறப்பான வெற்றியீட்டியுள்ளனர்.

1996 இல் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு இன்று மூவாராயித்துக்கும் மேற்பட்ட மாணவர்களையும் நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்களையும் கொண்ட கல்லூரியாக விளங்குகின்றது. 1902ம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட விவேகானந்தா சபை 1926 பங்கு மாதம் 24 ஆம்திகதி 25 மாணவர்களோடு விவேகானந்தர் பெயரில் பாடசாலையை ஆரம்பித்தது. அதன் திறப்பு விழாவன்று சுவாமி விபுலானந்த அடிகளும் சுவாமி சச்சிதானந்தரும் கலந்து சிறப்பித்தனர்.

இதுவே கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது இந்து வித்தியாலயமாகும். 1950 ஆம் ஆண்டில் பி.எஸ்.துரையப்பா அவர்கள் வித்தியாலய முகாமையாளராக நியமிக்கப்பட்டார் அப்போது மாணவர் தொகை 1040 ஆகவும் ஆசிரியர் தொகை 22 ஆகவும் உயர்த்தப்பட்டது. 1951ம் ஆண்டில் வித்தியாலய முகாமையாளராக திரு. குலசபாநாதன் அவர்கள் நியமிக்கப்பட்டார். அக்காலத்தில் விவேகானந்தா வித்தியாலயம் இலங்கை தீவிலேயே சிறந்த ஆரம்ப பாடசாலையாக திகழ்ந்தது.

1952 ஆம் ஆண்டில் பாடசாலை சிரே~;ட இடைநிலை பாடசாலை தரத்திற்கு உயர்த்தப்பட்டு முதன்முதலாக 16 மாணவர்கள் க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்ற அனுமதி வழங்கப்பட்டது. 1954ல் பாடசாலையும் காலை மாலையென இரு நேரங்களாக மாறியது.

இலங்கையின் தலைநகர் கொழும்பு மாநகரில் கொட்டாஞ்சேனையில் அடுக்கு மாடிகளுடன் விவேகானந்தா கல்லூரி தலைநிமிர்ந்து நிற்பது அனைத்து தமிழ் மக்களும் பெருமைப்படக்கூடிய விடயமாகும். குhலத்தின் சோதனைகளிலும் நெருக்கடிகளிலிருந்து மீண்டு உயரிய நிலையில் பேசப்படுகின்ற ஒரு கலங்கரை விளக்காக விவேகானந்தா கல்லூரி விளங்குகின்றது. வுளர்ச்சிப்பாதையில் கல்லூரி சந்தித்த நெருக்கடிகள், எதிர்ப்புகள் அநேகம். இருந்தபோதிலும் காலத்தின் சோதனைகளில் தேறி நின்று ஆகுக ஆக்குக என்ற சுவாமி விவேகானந்தரின் அருள்மொழிக்கு இணங்க கல்வி பணியாற்றி வருகின்றது. அமரர் சு.மகேசனின் காலப்பகுதியில் கல்லூரி புதிய வளர்ச்சிப் பாதையில் காலடி எடுத்து வைத்தை எவரும் மறுக்க முடியாது. இரவுபகலாக நிதி சேகரிப்பதிலும் புதிய கட்டடங்களை அமைப்பதிலும் அதிக அக்கறை காட்டினார். கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளிலும் புதிய யுக்திகளை வகுத்து செயற்படுத்தி அதில் வெற்றி கண்டார். கொழும்பு விவேகானந்தா கல்லூரி கடந்த 85 ஆண்டுகளாக உருவாக்கிய மாணவர்கள் ஏராளம். இக்கல்லூரி எதிர்காலத்திலும் மாணவர்களுக்கு ஆல விருட்சமாக விளங்கப்போவது உறுதி. 1963 ஆம் ஆண்டு எமது பாடசாலையு; அரசாங்க பாடசாலையானது.

குறிப்புகள்

•  1929 இல் ஆங்கிலப் பாடப் போதனை ஆரம்பிக்கப்பட்டது.

•  1954 இல் சாரணர் குழவில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

•  1962 இல் அரசாங்கம் பாடசாலையை பொறுப்பேற்றது. ஆதனைத் தொடர்ந்து 1963இல் மகாவித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டது. இவ்வாண்டிலிருந்து மாணவர்கள்

•  1975 இல் இரண்டு மாடிகளைக் கொண்ட கட்டடம் கட்டப்பட்டது.

• 1975 இல் பெண்கள் வலைப்பந்தாட்டக் குழு அமைக்கப்பட்டது.

•  1977இல் மேலைத்தேய பான்ட் வாத்தியக்குழு ஆண்களுக்காக அமைக்கப்பட்டது. இக்காலத்தில் உதைபந்தாட்டக் குழுவும் ஆரம்பிக்கப்பட்டது.

• 1978 இல் பெண்களுக்கான கீழைத்தேய பாண்ட் வாத்தியக்குழு உருவாக்கப்பட்டது. இக்குழு அகில உலக இந்து மாநாட்டின் போதும் நேபாள மண்னரின் இலங்கை விஸயத்தின்போதும் பங்குபற்றி பாரட்டுப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இன்று வரை இக்குழுக்கள் பல நிகழ்வுகளில் பங்குபற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

•  1981 இல் பெண்களுக்கான கீழத்தேய பாண்ட் அணி இங்கிலாந்து மகாராணியாரின் இலங்கை விஜயத்தின்போது அவரது வரவேற்பில ;கலந்துகெர்டது. ஆவரை வரவேற்க அழைக்கப்பட்ட ஒரே ஒரு தமிழ்பாடசாலை எமது பாடசாலை என்பது குறிப்பிடத்கத்கது.

•  1990 இல் பாடசாலை வளவினுள் சித்தி விநாயகர் கோயி; கட்டப்பட்டது.

•  1992இல் சுவானி விவேகானந்தர், விபுலானந்தர், ஆறு முக நாவலர் ஆகியோரது உருவச்சிலைகள் ஸ்தாபிக்கப்படு 24.03.2011 அன்று திரைநீக்கம் செய்யப்பட்டது.

•  1996 யூலை மாதத்தில் தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டு.