பாடசாலை அபிவிருத்தி சங்கம்

பாடசாலை அபிவிருத்தி சங்கமானது குறித்த ஒரு பகுதியைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி அபிலாஷைகளை ப+ர்த்தி செய்யும் வகையில் பாடசாலையை அபிவிருத்தி செய்தல் இப்பகுதியை சேர்ந்த மக்களின் வாழ்;கையை சமூக கலாச்சார பொருளாதார மாற்றங்ளை ஏற்படுத்துவதற்கு பாடசாலையே ஒரு காரணியாக பயன்படுகின்றது. பாடசாலையில் நடைபெறும் கல்வி கருத்தரங்குகளுக்கும் ஏனைய விடயங்களுக்கும் பராமரிப்பு நடவடிக்கைகளுக்கும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் பொறுப்புக்கள் ஆகும்.

இச்சங்கத்தில் அதிபர் தலைவராகவும் பெற்றோர் அல்லது நலன்விரும்பி ஒருவர் பொது செயலாளராகவும் அப்பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியர் ஒருவர் பொருளாளராகவும் நியமிக்கப்படுவர். பாடசாலையினால் அங்கிகரிக்கப்பட்ட பழைய மாணவர் சங்கத்திலிருந்து ஒருவர் நிர்வாக குழு உறுப்பினராக நியமிக்கப்படுவர். இச்சங்கத்தின் ஆயுட்காலம் குறைந்தபட்சம் ஒரு வருடகாலமாகும்.