முன்னாள் உப தலைவர்

இலக்கை நோக்கி வெற்றிநடை....
தலைநகரில் தனித்துவமான தமிழ் கல்லூரியாக புகழோடு விளங்கும் எமது விவேகானந்தா கல்லூரி 87 ஆவது ஆண்டுநிறைவை பெருமையோடு கொண்டாடும் இத்தருணமானது எம்மை பெருமிதம் கொள்ள செய்கிறது.
இந்த நிலையில் எமது கல்லூரிக்கென உத்தியோகபூர்வ இணையதளம் ஆரம்பிக்கப்படுவதானது காலத்தில் தேவைக்கேற்ற விடயமாகும். இதனை வருடங்களும் எமது கல்லூரி பல்வேறு கல்விமான்களையும் விளையாட்டு வீரர்களையும், கலைஞர்களையும், நேர்மைதிறன் தலைவர்களையும் எம் சமூகத்திற்காக வழங்கியுள்ளதென்பது நமக்கும் பெருமை சேர்க்கும் அம்சமாகும்.

87 வது ஆண்டு விழா கொண்டாடப்படும் இவ்வேளையில் கல்லூரியின் அபிவிருத்தியில் எமது பழைய மாணவர் சங்கமானது முழுமையான அர்ப்பணிப்புடன் அயராத பணி ஆற்றிவருவது அனைவராலும் போற்றப்படுகிறது.
பழைய மாணவர் சங்கத்தின் அங்கத்தவனாகவும் இதற்போதைய உப தலைவராகவும் நானும் இதில் பங்களிப்பு செலுத்திவருவது தனிப்பட்ட கௌரவமாக கருதுகின்றேன். தொடர்ந்தும் அனைவரோடும் கரம்கோர்த்து கல்லூரியின் அபிவிருத்திக்கான என் பயணம் தொடருமென இந்த தருணத்தில் குறிப்பிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

சு. அருள்குமார்
உப தலைவர்
தலைவர் 2011/2012