OSA Founder President Message

இலங்கை மேல் மாகாணம் தலைநகர் மத்திய கொழும்பில் சுவாமி விவேகானந்தர் பெயரில் தனித்தழிழ் கல்லூரியாக விவேகானந்தா கல்லூரி விளங்குகிறது. இக்கல்லூரியின் வளர்ச்சியில் தானாக நின்று செயற்பட்டுக்கொண்டிருக்கும் எங்கள் பழைய மாணவர் சங்கம் இன்று தலைநகரில் தலைநிமிர்ந்து வீறுநடை போடுவதற்கு ஓயாமல் உழைத்துக்கொண்டிருப்பது போல் இக்கல்லூரியின் முன்னேற்றத்திற்கும் கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்ட சாதித்த எங்கள் அதிபர்கள் உப அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள். பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், தொழிலதிபர்கள் மற்றும் கொடைவள்ளல்கள் ஆகியோர்களை நினைவுகூர்ந்து இக்கல்லூரி சிறப்பு பெற்று வருகிறது.

எங்கள் கல்வியிலும், கலையிலும் விளையாட்டுத்துறைகளிலும், திறனாய்வுப் போட்டிகளிலும் சாதனைகள் பல புரிந்து சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்கு பக்கபலமாக இருந்து உரிமையுடன், உறுதியுடனும் இயங்கிக்கொண்டிருக்கும் எங்கள் பழைய மாணவர் சங்கம் இன்னுமொரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதுதான் கொழும்பு விவேகானந்தா தேசிய கல்லூரியின் இணையத்தளம் ஒன்றை உருவாக்கி அதனை அங்குரார்ப்பணம் செய்துவைத்துள்ளது. இம்முயற்சியின் வெற்றிக்கு எனது நல்லாசிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு உலக நாடுகளில் வாழும் கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரும் இந்த இணையதளத்தின் மூலமாக எங்கள் கல்லூரியின் கல்வி அவிபிருத்திப் பணிகளில் பங்கேற்க வேண்டுமென்று, கனடாவில் வாழும் பழைய மாணவர்கள், கொழும்பு விவேகானந்தா பழைய மாணவர் சங்க கனடா கிளையின் நிர்வாக குழு அங்கத்தவர்கள் மற்றும் அனைவரது சார்பாகவும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

 

சின்னையா பாண்டியராஜா (சமாதான நீதவான்)

பழைய மாணவர் சங்கம் (ஆரம்பித்தவர்)

 

தலைவர்

கொழும்பு விவோனந்தா கல்லூரி பழைய மாணவர் சங்கம்

கனடா கிளை.