முன்னாள் நிதிசேகரிப்பு செயலாளர்

இன்றைய தினம் எனது கல்லூரியும் பழைய மாணவர் சங்கமும் வரலாற்றில் தடம்பதிக்கப் போவதை எண்ணும் போது எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

பலதசாப்தகால வரலாற்றை கொண்ட எனது கல்லூரியும் பழைய மாணவர் சங்கமும் தமது இணையத்தளங்களை அங்குரார்ப்பணம் செய்வது எனக்கு இரட்டிப்பான மகிழ்ச்சிக்கு காரணமாணகும்.

கொழும்பில் தலை நிமிர்ந்து நிற்கும் எமது பாடசாலையில் பயின்ற பழைய மாணவர்களாக உலகம் முழுவதும் இன்று வியாபித்து வாழ்கின்றனர். எமது பழைய மாணவர் சங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகள் தொடர்பாக அறிந்து கொள்ளவும் கல்லூரியின் தற்போதைய வளர்ச்சி உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளவும் இந்த இணையத்தளங்கள் நிச்சயம் உதவும் என்பது திண்மம்.

இன்றைய உலகில் இணையம் என்பது முக்கியமானது என்பதை எவராலும் மறுக்கமுடியாது. எனவே எமது இணையத்தளங்கள் பழைய மாணவர்களால் விரும்பி பார்க்கப்படும் என்பதுடன் எமது கல்லூரிக்கு சர்வதேசரீதியாக புகழை ஈட்டிக்கொடுக்கும் என்பதையும் மறுக்க முடியாது.

எமது கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இணைத்தளத்தை அங்குரார்ப்பணம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் உழைத்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

எஸ்.பாஸ்கரன் - நிதிசேகரிப்புசெயலாளர்
பழையமாணவர் சங்கம்