முன்னாள் விளையாட்டு அபிவிருத்தி செயலாளர்

தலைநகரில் தலைநிமிர்ந்து வீற்றிருக்கும் எமது விவேகானந்தா கல்லூரியின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் பழைய மாணவர் சங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் இன்று மலர்வது எனக்கு அளவிலா சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

விவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவர்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கு வழங்கும் பங்களிப்பை எவராலும் மறுக்க முடியாது. பழைய மாணவர் சங்கத்தின் விளையாட்டு அபிவிருத்தி செயலாளர் என்ற வகையில் இன்றும் கல்லூரிக்கு சேவையாற்ற எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்துக்கு இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றேன்.

குறிப்பாக கனிஷ்ட விளையாட்டுப் போட்டி, கராத்தே வகுப்புக்கள், நீச்சல் வகுப்புக்கள் உள்ளிட்டவற்றை பழைய மாணவர் சங்கம் தமது நிதி உதவியின் கீழும் உழைப்பின் கீழும் செய்கின்றமை பலரது பாராட்டை பெற்றுள்ளது.

எமது கல்லூரி 87 வருட வரலாற்றை கொண்டுள்ளது. எனினும் காலத்தின் தேவைக்கேற்ப இணையத்தளமொன்றை அமைக்க பழைய மாணவர் சங்க நிர்வாகத்தினர் எடுத்து நடவடிக்கைக்கு எனது  நன்றிகள். பழைய மாணவர் சங்கத்தின் செயற்பாடுகள் பாடசாலைக்கு இன்றியமையாதது. பழைய மாணவர் சங்கத்தின் நடவடிக்கைள் வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

நன்றி
பெருமாள் திருக்குமாரன்
விளையாட்டு அபிவிருத்தி செயலாளர்