முன்னாள் நிர்வாக குழு உறுப்பினர் வாழ்த்துச் செய்தி

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் பள்ளி பருவம் முக்கியமானது. எளிதில் மறக்க முடியாத அளவுக்கு பல ஞாபகங்களையும் சுகமான நினைவுகளையும் கொண்டது.

அத்தகைய சுகமான நினைவுகளால் எனது கல்லூரி வாழ்க்கையும் நிறைந்திருந்தது. அந்த ஞாபகங்கள் இன்றும் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது.  கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது இந்து வித்தியாலயமான விவேகானந்தா இன்று பலராலும் போற்றப்படும் ஒரு தேசிய பாடசாலையாக வளர்ந்துள்ளது.

வருடந்தோறும் கல்வி நடவடிக்கைகளை நிறைவுசெய்துவிட்டு பலர் பழைய மாணவர்களாக பாடசாலையை விட்டு வெளியேறுவோர் ஏராளம். கல்லூரி படிப்பின் பின்னரும் பாடசாலைக்கும் எமக்கும் இடையிலான தொடர்புகள் பேணப்படுகின்றது. பழைய மாணவர் சங்கம் என்ற பாலமே எமது தொடர்புகளுக்கு முக்கிய பங்காற்றுகின்றது. கடல் கடந்து வாழும் எனது நண்பர்களையும் பாடசாலை உறவுகளையும் இணைக்கும் முக்கிய பங்கை கடந்த காலங்களில் பழைய மாணவர் சங்கம் முன்னெடுத்தது.

இத்தகைய நிலையில் பழைய மாணவர் சங்கத்தின் இணையத்தளம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்படுவது எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது. பழைய மாணவர் சங்க நிர்வாக குழு உறுப்பினர் என்ற வகையில் எனக்கு இது அளவிட முடியாத மகிழ்சியை தந்துள்ளது.

இத்தகைய நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எஸ்.சுபாஷ் குமார் - நிர்வாக குழு உறுப்பினர் வாழ்த்துச் செய்தி
பழைய மாணவர் சங்கம்