முன்னாள் தலைவரின் வாழ்த்துச் செய்தி

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவை போன்றதொரு உறவே ஒரு பாடசாலைக்கும் அதன் பழைய மாணவர்களுக்கும் இடையில் காணப்படுகின்றது. குறிப்பாக தொப்புள் கொடி உறவு என்று கூட இதனை குறிப்பிடுவதில் எந்தவிதமான தவறும் இல்லை.
கொழும்பு விவேகானந்தா கல்லூரிக்கும் அதனூடாக உருவாக்கப்பட்ட மாணவர்களுக்கும் இடையிலும் அத்தகைய பின்னிப்பிணைந்த உறவே உள்ளது. எமது வாழ்க்கையில் சிறு பராயத்தில் பாடசாலைக்கு நுழையும் நாம் இளைஞர்களாகவும் யுவதிகளுமாகவே பாடசாலை வாழ்க்கைக்கு விடைகொடுக்கின்றோம்.
எமது கல்லூரி 87 வருடத்தில் தடம்பதித்துள்ள இவ்வருடத்தில் பழைய மாணவர் சங்கமும் தனது 22 ஆண்டு பூர்த்தியை கொண்டாடுகின்றது. பாடசாலை கல்விக்கு விடைகொடுத்துவிட்டு வெளியேறியபோதிலும் அந்த நினைவுகள் இன்றும் பசுமையாகவே அமைந்துள்ளது. பாடசாலை வளவினுள் நுழையும்போது எமது கடந்த கால ஞாபகங்கள் எம்மை சிறுபராயம் வரை கொண்டு செல்வதற்கு காரணம் அதன்மீது எமக்குள்ள ஈர்ப்பாகும்.
பாடசாலயை விட்டு வெளியேறினபோதிலும் தமது கடமை நிறைவடையவில்லை என்ற நோக்கில் பாடசாலைக்கு ஒத்துழைப்பு வழங்கும் மாணவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். எமது பாடசாலைக்கும் அத்தகைய மாணவர்கள் கிடைத்திருப்பது பெருமைப்பட வேண்டிய விடயம். அத்தகைய மாணவர்களுக்கு தலைவராக இருப்பதையிட்டு நான் இந்த நேரத்தில் பெருமிதம் கொள்கின்றேன். 
எமது கல்லூரியின் பழைய மாணவர்கள் இன்று உலகம் முழுவதும் பரந்து வாழுகின்ற நிலையில் அவர்கள் கல்லூரி தொடர்பாகவும் பழைய மாணவர் சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும் அறிந்துகொள்வதற்காக பிரத்தியேக இணையத்தளங்களை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எமது சங்கத்துக்கு உதயமானது. அந்;த உழைப்பின் பயன் இன்று விவேகானந்தா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் இணையத்தளம் மலர்ந்துள்ளன.
இந்த இணையத்தளங்கள் நிச்சயம் பாடசாலைக்கும் பழைய மாணவர்களுக்கும் உதவும் என்பதை என்னால் கூறலாம். எமது கல்லூரியினதும் பழைய மாணவர் சங்கத்தினதும் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை அங்குரார்ப்பணம் செய்ய உழைத்த அனைவருக்கும் எனது சிரம்தாழ்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
நன்றி
பெரியசாமி சுரேஸ்
தலைவர்
பழைய மாணவர் சங்கம் 
2012, 2013